தொழில்நுட்ப கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தை, இந்தியா சுட்டு வீழ்த்தியதாக கதை அளக்கும் பாகிஸ்தான் - என்னென்ன சொல்லி இருக்கு பாருங்க!

Old photos of crashed Pak Air Force jets shared as supposed recent attacks by India and Iran

Update: 2022-04-01 06:00 GMT

மூன்று பாகிஸ்தானிய போர் விமானங்கள் ஒரே இரவில் வெவ்வேறு பகுதிகளில் இந்திய மற்றும் ஈரானிய விமானப்படைகளால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஒரு ட்விட்டர் பயனர் மார்ச் 27 அன்று புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"பாகிஸ்தானுக்கு மோசமான இரவு. 3 போர் விமானங்கள் ஒரே இரவில் அழிக்கப்பட்டன. ஜெட் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது, மேலும் இரண்டு ஜெட் விமானங்கள் ஈரானால்  சுட்டு வீழ்த்தப்பட்டது" என அதில் குறிப்பிட்டு இருந்தார். 



எங்கள் குழு இந்த செய்தி, தவறானது எனக் கண்டறிந்தது. இந்திய விமானப்படையோ அல்லது ஈரானிய விமானப்படையோ பாகிஸ்தான் ஜெட் விமானங்களை தாக்கியதாக எந்த செய்தியும் இல்லை. பகிரப்பட்ட படங்கள் அனைத்தும் பழையவை.

முதல் படத்தில் இருப்பது, PAF FT-7 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி விமானத் தளம் அருகே விழுந்து நொறுங்கியதில், ஹரிஸ் பின் காலித் மற்றும் இபாதுர் ரஹ்மான் ஆகிய இரண்டு பாகிஸ்தான் விமானிகள் உயிரிழந்தனர்.



இரண்டாவது படத்தில் இருப்பது, தொழில்நுட்பக் கோளாறால் இந்த போர் விமானம் மியான்வாலியின் சப்ஜசார் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த விபத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முகமது ஜீஷான் உயிரிழந்தார்

 


மூன்றாவது படத்தில் இருப்பது, PAF F-7 PG ஜெட்  பயிற்சிக்காக சாமுங்லி விமானத் தளத்தில் இருந்து பறந்தபோது சர்கோதாவில் விபத்துக்குள்ளானது. இதில் லெப்டினன்ட் பிலால் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

 


நான்காவது படம், மார்ச் 22 அன்று வடமேற்கு நகரமான பெஷாவர் அருகே நடந்த விபத்தில் PAF இன் இரண்டு விமானிகள் கொல்லப்பட்ட சம்பவம். 

எந்த செய்தியிலும் பாகிஸ்தான் விமானப்படை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. விபத்துக்குள்ளான ஜெட் விமானங்களின் படங்கள் தவறான செய்தியுடன் பகிரப்பட்டுள்ளன என்பது உறுதியாகிவிட்டது. 

 




 





Similar News