நாகலாந்தில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டதாக பரவி வரும் வீடியோ!

Old Video From Colombia Falsely Linked To Civilian Killings In Nagaland

Update: 2021-12-10 12:20 GMT

நாகாலாந்தில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன், ராணுவ வீரர்கள் கும்பலாகக் கூட்டிச் செல்லப்படுவதாக, 29வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ நாகாலாந்துடன் தொடர்புடையது அல்ல என்று தெரிய வந்துள்ளது. இது கொலம்பியாவில் இருந்து எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.


ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் பகிரப்பட்ட காணொளியில், இராணுவ படையினர் பின்னோக்கி நகர்வதையும், தங்களுக்கு எதிராக கும்பல் கும்பலாகக் முன்னோக்கி வரும் ஆண்களை எச்சரிக்கும் முயற்சியில் தரையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் காட்டுகிறது. சமீபத்தில் நாகாலாந்தில் பொதுமக்கள் 14பேர் கொல்லப்பட்ட பின்னணியில் இந்த வீடியோ பகிரப்படுகிறது.

டிசம்பர் 04 அன்று , மோன் மாவட்டத்தின் ஓட்டிங் கிராமத்தில் உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ட்ரக்கை கிளர்ச்சியாளர்கள் என இராணுவத்தினர் தவறாகக் கருதி 6 பேரைக் கொன்றனர். இதைத் தொடர்ந்து கிராம மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மேலும் எட்டு பொதுமக்களும் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.

இதனை சுட்டிக்காட்டிய ட்விட்டர் பயனர்கள், "வீரர்கள் மீது தாக்குதல் நடத்தாத வரை துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள்" மற்றும் "ஆயுதமேந்திய வீரர்கள் காட்டும் நிதானத்தைக் கவனியுங்கள்" போன்ற தலைப்புகளுடன் மேற்கண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

உண்மைச் சரிபார்ப்பு

இந்த வீடியோ ஜனவரி 07, 2018 ஏற்கனவே ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பரப்பப்பட்ட வீடியோ, காகாவின் கொரிண்டோவில் உள்ள ஒரு வயலில் நுழைய முயன்றபோது பழங்குடி மக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த வாய்மொழி மோதலைக் காட்டும் காட்சியாகும். இது நாகாலாந்தில் நடந்ததாக கூறப்படுவது உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.


Full View






Tags:    

Similar News