இது தான் அமைதி போராட்டமா? வீடியோ ஆதாரம் இருக்கும் போதே காங்கிரஸ் தலைமை செய்யும் பித்தலாட்டம்!

Update: 2022-07-27 07:13 GMT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பணவீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜூலை 25அன்று காங்கிரஸ் எம்.பிக்கள் லோக்சபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணு கோபால், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், ஜோதிமணி மற்றும் டி.என்.பிரதாபன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ட்வீட் செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதில் எந்த இடத்தில் அமைதி காக்கப்பட்டது என தெரியவில்லை. 

உண்மை என்ன?

நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸ் எம்பிக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக கே.சி.வேணு கோபால் கூறியது தவறானது. அந்த வீடியோவில், போராட்டக்காரர்கள் அமர்வை சீர்குலைப்பதையும், சேதத்தை ஏற்படுத்துவதையும் வீடியோவில் காணலாம்.


Similar News