புதிய தலைமுறை தொலைக்காட்சி மூடப்படுவதாக பரவி வரும் தகவல்! பின்னணியில் நடந்து இது தான்!

புதிய தலைமுறை தொலைக்காட்சி விரைவில் மூடப்படும். நிறுவனர் பச்சைமுத்து அறிவிப்பு"

Update: 2021-11-20 03:47 GMT

"புதிய தலைமுறை தொலைக்காட்சி விரைவில் மூடப்படும். நிறுவனர் பச்சைமுத்து அறிவிப்பு" என ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனர் பெயர் பச்சமுத்து. அவர் தன்னுடைய பெயரை பாரிவேந்தர் என மாற்றிவிட்டார். 2021 நாடாளுமன்றத் தேர்தலில் பாரிவேந்தர் என்றுதான் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் நியூஸ் கார்டில் பச்சைமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது புதிய தலைமுறை அவருடைய பெயரை பச்சைமுத்து என்று தவறாக குறிப்பிட வாய்ப்பு இல்லை.




 


அதே போல, இந்த நியூஸ் கார்டில் இருந்த தமிழ் ஃபாண்ட் வழக்கமான புதிய தலைமுறை பயன்படுத்தும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. பின்னணி டிசைன் மற்றும் வாட்டர் மார்க் லோகோ போன்ற எதுவும் இல்லை. இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.




 


2021 நவம்பர் 14ம் தேதி வெளியிட்டது போல அந்த நியூஸ் கார்டு இருந்ததால், அந்த நாளில் வெளியான புதிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் புதிய தலைமுறை மூடப்படும் என்று அதன் உரிமையாளர் கூறியதாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனும் இதனை உறுதி செய்தார்.

இதன் அடிப்படையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி விரைவில் மூடப்படும் என்று பச்சமுத்து கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

InputCredit: factcrescendo.com






Similar News