சிவிங்கி புலிகளை புகைப்படம் எடுத்த போது பிரதமரின் கேமரா லென்ஸ் மூடப்பட்டு இருந்ததா?
சிவிங்கி புலிகளை புகைப்படம் எடுத்த போது பிரதமரின் கேமரா லென்ஸ் மூடப்பட்டு இருந்ததா உண்மை தகவல் என்ன?
சனிக்கிழமையன்று, பிரதமர் மோடி தனது 72வது பிறந்தநாளை முன்னிட்டு, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளில் இரண்டை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உள்ள சிறப்பு அடைப்பில் விடுவித்தார். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ஏழு சகாப்தங்களாக நாட்டில் அழிந்து விட்டதாக கருதப்படும் சிவங்கி புலிகளை பூங்காவில் திறந்து விட்ட அவற்றின் புகைப்படத்தை கேமராவில் பதிவிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி அவர்கள் பயன்படுத்திய கேமராவின் லென்ஸ் கவரை மூடியை சரியாக எடுக்காமல் புகைப்படம் எடுத்ததாக சில புகைப்படங்கள் வைரலானது.
DSLR கேமராவைப் பயன்படுத்தி சில காட்சிகளை எடுத்தார், புகைப்படம் எடுப்பதில் அவருக்கு இருந்த காதலை வெளிப்படுத்தினார். அதே நாளில், திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி.யான ஜவஹர் சிர்கார், குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி சிறுத்தைகளின் புகைப்படங்களை கிளிக் செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளார். ஜவ்ஹர் சிர்கார் பகிர்ந்துள்ள ஒரு படத்தில், பிரதமர் மோடி அவர்கள் கேமராவில் பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்ததில் கேமரா லென்ஸ் இன் மூடி சரியாக எடுக்காமல் புகைப்படம் எடுப்பது குறித்து தன்னுடைய பதிவை பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இது பற்றி கூறுகையில், "எல்லா உண்மைகளையும் மூடி வைப்பது இருக்கட்டும். ஆனால், புகைப்படம் எடுக்கும்போதும் கேமரா லென்ஸ் கவரை மூடி வைத்திருப்பதுதான் உங்களின் தொலைநோக்கு பார்வையா?" என கிண்டல் செய்து இருந்தார். இந்த புகைப்படத்தின் உண்மை தன்மையை ஆராயும் பொழுது அது முற்றிலும் போலியானது என்பது தெரிய வந்தது. இந்த பதிவை குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுகந்தா மஜும்தார் தன்னுடைய கருத்தை தெரிவிக்கையில், "குறைந்தபட்ச அறிவு உடையவர்களையாவது உங்கள் கட்சியில் M.P.யாக வைத்திருங்கள் மம்தா" என்று அவர் கேட்டிருக்கிறார்.
Input & Image courtesy: Only Fact News