தேசிய கட்சித்தலைவராக இருந்தவர் என்ற அடிப்படை அறிவே இல்லாமல் போலி தகவல் பரப்பும் ராகுல் காந்தி..! கல்யாணத்தை நிறுத்த சீப்பை மறைத்த கதை!

Rahul Gandhi tries to pass off old image of a Kisan rally as that of recent Mahapanchayat in Muzaffarnagar

Update: 2021-09-07 03:46 GMT

opindia

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெருமளவில் திரண்டிருந்த 'விவசாயிகளை' வாழ்த்தினார். #FarmersProtest என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி, ஹிந்தியில் 'பாரத் பாக்ய வித்ஹாதா' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த படம், மோடி அரசை அவதூறாகப் பேசுவதற்காக தனது தொடர்ச்சியான பிரச்சாரத்தை வெளிக்காட்டிக்கொள்ளவும், பழைய, தொடர்பில்லாத ஒரு படத்தை ராகுல் காந்தி பயன்படுத்தியுள்ளார். இந்த படம் உண்மையில் இந்த ஆண்டு பிப்ரவரி  உத்தரபிரதேசத்தின் ஷாம்லியில் நடந்த கிசான் பேரணியில் எடுக்கப்பட்டதாகும். 




 


இதனை சமீபத்திய விவசாயிகளின் போராட்ட படத்தை போல ராகுல் காந்தி சித்தரிக்க முயற்சி செய்துள்ளார். இது பல ஊடகங்களால் பயன்படுத்தப்பட்ட பிடிஐயின் புகைபடமாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஷாம்லி பற்றிய கட்டுரைக்கு அதே படத்தை காங்கிரஸ் நாளிதழ் நேஷனல் ஹெரால்டும் பயன்படுத்தியுள்ளது. உண்மை என்னவென்று வெளிப்படையாக தெரியும் நிலையிலும் மக்களை முட்டாளாக்கப்பார்க்கிறார் ராகுல் காந்தி. 




 


காங்கிரஸ் 'விவசாயிகளின் போராட்டங்களை' நடத்துகிறது

முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உட்பட பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களின் வெளிப்படையான ஆதரவுடன் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டம் நடைபெறுகிறது. 

மூன்று புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரும்பியவர்களுக்கு விற்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இடைத்தரகர்களை பரிவர்த்தனையிலிருந்து நீக்கும் இந்த நடவடிக்கை ஒரு சில 'விவசாயிகளை' எரிச்சலடையச் செய்ததாக தெரிகிறது.  சில மாதங்களில் உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில்,  ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பாக ஒரு பினாமி அரசியல் பிரச்சாரத்தை நடத்த 'விவசாயிகள்' என்ற போர்வையில்  களமிறங்கியுள்ளனர். 

Tags:    

Similar News