வீரம் மற்றும் விரீயம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என சொல்வது தான் ஆளுநர் வேலையா? - ஆளுநர் படிக்காமல் விட்டது என்ன?

Update: 2023-01-10 01:08 GMT

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் தனது உரையில் இருந்த சர்ச்சையான விஷயங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் தவிர்த்தார். இதனை திமுகவினர் எதிர்த்தனர். ஆளுநர் இருக்கும் போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தனர்.  தீர்மானத்தை வாசித்து கொண்டிருக்கும் போதே ஆளுநர் வெளியேறினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தரப்பு விளக்கம்

உரையில் திருத்தம் செய்ய கூறிய போது அச்சுக்கு சென்று விட்டதால் பேசும் போது மாற்றிக் கொள்ளலாம் என அரசு தரப்பு தெரிவித்தது.

ஆளுநர் உரையை நீக்குவதாக கூறிவிட்டு ஒளவையார் மற்றும் பாரதியாரின் வரிகளை நீக்கியுள்ளனர்.

ஆளுநர் உரைக்கு பின்னர் சபையை முடிக்காமல் முதல்வர் பேசியது மரபு மீறல்

ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்த தினத்தை நினைவு கூறி ஆளுநர் பேசியது மரபு மீறியது அல்ல.

வீரம் மற்றும் விரீயம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி என்பதை ஆளுநர் கூற முடியாது

எதார்த்தத்தை மீறிய அரசை புகழும் வரிகளை பேச மாட்டேன் என ஆளுநர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

தமிழக மீனவர்கள் விடுவிடுக்கப்பட்டது மாநில அரசின் பங்களிப்பு மட்டுமே என்பதை எப்படி ஏற்பது?

தொழில் முதலீடு தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல் இருந்ததால் ஆளுநர் அதை பேசாமல் தவிர்த்துவிட்டார்.

ஆளுநர் உரைக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிட்ட போது சபாநாயகர் அதை தடுக்காதது மரபு மீறிய செயல். 

Input From: Samayam 


Similar News