RSS பயிற்சி முகாமில் மாணவர் ஒருவர் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
சீதாபூர் லைவ் நியூஸ் என்ற டிவிட்டர் பக்கம் அக்டோபர் 8ம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. அதிலும் சமஸ்கிருத பள்ளி ஆசிரியர் மாணவனைக் கடுமையாகத் தாக்கினார் என்றுதான் உள்ளது.
சீதாபூர் காவல் துறையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளது. அதிலும் சமஸ்கிருத பள்ளியில் 2 மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வைத்து பார்க்கும் போது RSS பயிற்சி முகாமில் சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உத்தரப்பிரதேசம் சீதாபூர் உள்ள சமஸ்கிருத பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.