"விமர்சிக்க எதுவும் இல்லேன்னா இப்படியும் பண்ணுவாங்க" - பிரதமர் மோடி தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவதை வைத்து பரவி வரும் தகவல்!
rumor-circulating-that-pm-modi-did-a-drama-like-sharing-meal-with-labourers
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, அதனை தவறான முறையில் சித்தரித்துள்ளனர்.
வைரலாகும் ஒரு பேஸ்புக் பதிவில், பிரதமர் உணவருந்தும் படத்தை பகிர்ந்து, அதற்கு கீழே, "உடன் உட்கார வைக்கப்பட்ட எவரும் அவரோடு சரிநிகராக சாப்பிட்டுவிடக் கூடாது. எல்லாமே ஒரு போட்டோ சூட்டுக்குத் தான் (மற்றவர்கள் தட்டு திருப்பி வைக்கப்பட்டுள்ளது)'' என பதிவிட்டுள்ளனர். இதையும் உண்மை என்று நம்பி ஒரு கட்சி சார்பு ஆதரவாளர்கள், அப்படியே ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை சரிபார்ப்பு
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அதனை திறந்து வைத்த பிரதமர் மோடி, அந்த நிகழ்வின்போது கோவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார். அவர்களுடன் எவ்வித பாகுபாடும் இன்றி சமமாக உணவு அருந்திவிட்டு, அருகில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பிரதமர் தொழிலாளர்களுடன் சமமாக பழகியதை பாராட்டியும், விமர்சித்தும் இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
பேஸ்புக் பதிவில் பகிரப்படுவது போல, தொழிலாளர்களுடன் சமமாக அமர்ந்து உண்பதுபோல நடித்தார் என்பது உண்மையில்லை. பிரதமர் மோடியுடன் தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியது உண்மைதான். அதுபற்றி மோடியே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முடிவு
தொழிலாளர்களுடன் சமமாக அமர்ந்து உண்பதுபோல நடித்தார் என பரவி வரும் தகவல் பொய்யானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும், ஊறு விளைவிக்கும்.