கழிவறையில் சீமான் படம் வரையப்பட்டதாக பரவி வரும் தகவல் !

கழிவறையில் வரைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Update: 2021-12-18 13:24 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவர் ஆளும் திமுக அரசை விமர்சித்ததை தொடர்ந்து, இந்த பதிவு வைரலானது.

இதனை திமுக ஆதரவாளர் சுந்தரவள்ளி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்தபோது இது மோசடியான வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

உண்மை சரிபார்ப்பு

வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. Getty images என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்தே மேற்கண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட படமே எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக கூறி வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பது உறுதியாகிறது.








 





Tags:    

Similar News