என்னங்க பித்தலாட்டம் இது? சூர்யா, ஜோதிகா, உதயநிதியின் போலி ஆஸ்கார் விருது நாடகம்! அவார்டு கொடுப்பதே நம்மூர்காரர் தானாம்!

SuryaJyotika-Global-Community-Oscar-for-Udayanithi

Update: 2022-01-21 05:23 GMT

"சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது" என கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல், பரவலாக செய்தி வெளியாவதை காண முடிகிறது. இதனை ஒரு சில தமிழ் ஊடகங்கள், நிஜ ஆஸ்கார் வழங்கப்பட்டது போல சித்தரித்து, புளாங்கிதம் அடைந்து வருகின்றன. இதன் பின்னணியில் உள்ள உண்மை குறித்து அறிந்து கொள்வோம்.

உண்மை சரிபார்ப்பு

சமுதாய ஆஸ்கர் விருது குறித்து, சமூக வலைதளங்களிலும், இணையதளத்திலும் தேடிப்பார்த்த பொழுது, கீழ் கண்ட இன்விடேஷன் கிடைத்துள்ளது.


இந்த விருதை கொடுப்பது VGP என்கிற DR. Vijay G Prabhakar என்ற அமெரிக்க வாழ் தமிழர் ஆவார். AMEC என்கிற அறக்கட்டளை மூலம் விருது கொடுக்கப்படுகிறது. இந்த விஜய பிரபாகர் எனும் நபர், தமிழகத்தின் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரபாகர் என்பவரின் மகன். அவர் தாத்தா பெயர் பிளிப், முன்னாள் சேலம் மாவட்ட துணை கலெக்டராக பதவி வகித்தவர். விஜய் பிரபாகர் மாமனார் பெயர் நியூட்டன் தேவசகாயம், அவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாவார். மேலும் இந்த விருது வழங்குவதற்கு ஜூரியாக செயல்பட்டவர்களில், Manne Lingaiahஎன்ற ஐ.ஐ.டி சென்னையின் முன்னாள் மாணவரும் இடம்பெற்றுள்ளார்.




 


இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது, யுனெஸ்கோ மன்றம் கொடுத்த விருதை, யுனெஸ்கோ அமைப்பே கொடுத்த விருது போல சித்தரித்தது நினைவில் வந்து போகிறது.




 


இது குறித்த சில வீடியோ காட்சிகளை கீழே காணலாம்.


Full View


இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு தனியார் அமைப்பால் வழங்கப்படும் விருதை,  உண்மையான ஆஸ்கர் அவார்டு போல சித்தரித்துக்கொண்டு, ஒரு கட்சி சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிடுவது அப்பட்டமாக உறுதியாகிவிட்டது.

 




Tags:    

Similar News