மத்திய அமைச்சர் அமித் ஷா அந்தமான் தீவுகளின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்! உடைக்கப்பட்ட உண்மை!

நிகோபர் தீவுகள் பெயரை அமித் ஷா மாற்றியதாக வைரலாகும் தகவல்

Update: 2021-10-26 00:45 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பெயரை மாற்றி இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகளை சோதித்து பார்த்தால், அமித் ஷா இதுபோன்று எந்த அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஆர்கிபலேகோ தீவுகளின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுகள் என கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் 3 நாள் பயணமாக உள்துறை அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றிருந்தார். எனினும், தீவுகளின் பெயர் மாற்றம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இதுபற்றிய செய்திகளும் வெளியாகவில்லை.

இதுபற்றிய இணைய தேடல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, டிசம்பர் 2018 வாக்கில் பிரதமர் நரேந்திர மோடி ரோஸ் தீவுகளின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டுவீப் என பெயர் மாற்றியது பற்றிய செய்தி குறிப்புகள் கிடைத்தன. அந்த வகையில் அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயரை அமித் ஷா மாற்றவில்லை என உறுதியாகி விட்டது.

ஒரு சில ஊடகங்கள் சோஷியல் மீடியாவில் வைரலான தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.




Tags:    

Similar News