மத்திய அரசுக்கு ரூ.4,210 கோடி கடன் பாக்கி வைத்த தமிழ்நாடு மின் வாரியம் - அம்பலமான உண்மைகள்

Update: 2022-07-10 01:59 GMT

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகவும், தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களால் மட்டுமே மின்வெட்டு குறைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. உண்மையில் தமிழகத்தின் மின் தேவையில் 40 சதவீதத்திற்கும் மேல் மத்திய அரசை சார்த்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசின் நிறுவனங்களுக்கு, தமிழக மின் வாரியம், 4,210 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளது. இந்திய அணுமின் கழகத்திற்கு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்திலும்; கர்நாடகா மாநிலம் கைகாவிலும் அணுமின் நிலையங்கள் உள்ளன.

கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து, தினமும் 1,152 மெகா வாட் மின்சாரமும், கைகாவில் இருந்து 224 மெகா வாட்டும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தை, மத்திய அரசின், பவர்கிரிட் நிறுவனத்தின் மின் வழித்தடங்கள் வாயிலாக, தமிழக மின் வாரியம் பெறுகிறது.

ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கியதற்கான பணத்தை, 45 - 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.ஆனால், மின் வாரியம், குறித்த காலத்தில் பணத்தை வழங்குவதில்லை. அதன்படி, மே மாத நிலவரப்படி, கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்கு, 2,250 கோடி ரூபாயும், கைகாவில் மின்சாரம் வாங்கியதற்கு, 493 கோடி ரூபாயும், இந்திய அணுமின் கழகத்திற்கு, மின் வாரியம் நிலுவை வைத்து உள்ளது.

Input From: dinamalar 


Similar News