சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் தமிழிசைக்கு நடந்த சம்பவத்தை திரித்து பரப்பும் ஊடகங்கள் - அவரே வெளியிட்ட நெத்தியடி விளக்கம்!

Update: 2022-07-07 08:10 GMT

புதுச்சேரி  கவர்னர் தமிழிசை சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்றார்.  அப்போது கோயில் தீட்சிதர்கள் ஆளுநருக்கு பிரசாதம் வழங்கினர்.

அப்போது கோவிலுக்குள் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அதனை ஜாதிய ரீதியாக திரித்து பேஷன் ஆரம்பித்தனர். 

பின்னர் புதுச்சேரிக்கு வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிதம்பரம் கோயிலில் அவமானப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்தார். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்களுக்கு அவமரியாதை செய்யப்பட்டதான புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியற்கு துணைநிலை ஆளுநர், " சிதம்பரம் நடராஜர் கோவிலில் தன்னிடம் ஒருவர் வந்து இந்த இடத்தில் உட்கார வேண்டாம் மற்றொரு இடத்தை காட்டி அங்கே உட்காருங்கள் என்றார்.

நான் ஏற்கவில்லை. இறைவனை பார்க்க வந்துள்ளேன். இங்குதான் உட்காருவேன் என்றேன். அவர் போய் விட்டார். அதை நான் பெரிதாக நினைக்கவில்லை" என்றார்.

Input From: News18 


Similar News