அது 10 ஆயிரம் கோடி அல்ல; 1200 கோடி - குத்து மதிப்பாக கேள்வி கேட்ட தி.மு.க எம்.பிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த பதிலடி!
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி வில்சன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழில் கேள்வி எழுப்பினார்.
2020 முதல் 2023ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரத்து 879 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள் என கேட்டார்.
தமிழில் பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையிலும் இதே கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 10 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று தமக்கு தெரியவில்லை என கூறிய நிர்மலா சீதாராமன், 10 நாட்களுக்கு முன்பு பயன்பாட்டு சான்றிதழின்படி தமிழ்நாட்டிற்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
தமிழக அரசுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி 1200 கோடி ரூபாய் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். ஆனால் திமுக எம்பி வில்சன் 10 ஆயிரம் கோடிக்கு மேல் தர வேண்டும் என கேள்வி கேட்டு, மத்திய அரசின் மீது களங்கம் ஏற்படுத்த இருந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.