செந்தில் பாலாஜி லண்டன் பயணம் பித்தலாட்டம்! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலம்!

Update: 2022-08-28 07:11 GMT

5 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார். 

இப்பயணத்தில் எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு மின் பகிர்மான இயக்குனர் சிவலிங்கராஜா உள்ளிட்டோர் அவருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் மான்செஸ்டரில் அசோசியேட் பிரிட்டிஷ் போர்ட்ஸ் கிரிம்ஸ்பி இம்மிங்ஹாம் துறைமுகத்தில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் லண்டன் சென்று வந்ததற்கான செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு அமைச்சரின் தனிப்பட்ட பயணம் என்பதால் தகவல் தர முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு முறை பயணம் என ஊடகங்களுக்கு தெரிவித்த நிலையில், தனிப்பட்ட பயணம் என கூறி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

Similar News