தி.மு.க IT விங்கின் போட்டோஷாப்பை உண்மை செய்தியாக பகிர்ந்த 'தி ஹிந்து' நாளிதழ்!

Update: 2021-04-05 12:23 GMT

கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு எதிர்க்கட்சிகளைப் பற்றி போலி செய்திகளையும் தவறான செய்திகளையும் பரப்புவதில் பஞ்சமிருக்காது. தி.மு.க இதில் பெரும்பாலும் முன்னணியில் இருக்கும். பத்திரிகைக்கைகளுக்கு உண்மை எது பொய் எது என கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

சமீபத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோயம்புத்தூருக்கு வந்தபொழுது, அவரை வரவேற்பதாக அடிக்கப்பட்ட போஸ்டரில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறோம் என்று இருந்தது. அதற்கு பதிலாக 'தக்ஷின பிரதேசத்திற்கு' வரவேற்கிறோம் என்று போட்டோஷாப் செய்த படங்கள் தி.மு.க ஐடி விங்கால் பரப்பப்பட்டன.

ஏற்கனவே பா.ஜ.க தேர்தல் வாக்குறுதிகளில் தமிழ்நாட்டிற்கு தட்சிணப்பிரதேசம் என்ற பெயர் மாற்றப்படும் என்ற பொய் வாக்குறுதியை சேர்த்து தி.மு.க பரப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோலி செய்தி என்று பெரும்பாலோனோர் அறிந்திருந்தாலும், விவரம் அறியாத மக்களிடம் தமிழ்நாட்டின் பெயர் மாறப் போகிறது என பா.ஜ.கவின் பெயரைக் கெடுப்பதற்காக செய்யப்பட்டது என்பது ஐயமில்லை.

ஹிந்து பத்திரிகையில் இதுகுறித்து என்று வெளியான ஒரு சுருக்கமான அரசியல் செய்திகள் பகுதியில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை போட்டு அதை உண்மை செய்தி போல் பகிர்ந்து, இதற்கு தி.மு.க பதிலடி கொடுத்ததாக ஒரு அரசியல் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கு பா.ஜ.க செய்தி தொடர்பாளர் S G சூர்யா, தனது கண்டனங்களை தெரிவித்தார். தாங்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி விமர்சனம் செய்யாமல் போட்டோஷாப் செய்யப்பட்டு தி.மு.க பரப்பும் பொய் செய்திகளை வைத்து தங்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தி ஹிந்துவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மாலினிக்கு டேக் செய்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு பா.ஜ.கவும் ட்விட்டரில் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பத்திரிகைக்காரர்களே போட்டோஷாப் போலி செய்திகளுக்கும் உண்மையான செய்திகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்துகொள்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.


Tags:    

Similar News