இந்தியாவில் ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமா? உண்மை என்ன?
ராஜபக்சே சகோதரர்கள் குடும்பம் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து இந்திய தூதரகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ராஜபக்சே சகோதரர்கள் குடும்பம் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து இந்திய தூதரகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ராஜபக்சே சகோதரர்களின் வீடுகளை எரித்து, ஆளும் கட்சி பிரமுகர்களை தாக்கியும் அங்கு மக்களால் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே குடும்ப வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அலரி மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தாரும் ஹெலிகாப்டரில் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜபக்ச குடும்ப உறுப்பினரான நமல், ராஜபக்சேவின் மனைவி, அவரின் மகன் ஆகியோர் நேற்று காலை கொழும்பில் இருந்து திரிகோண கடற்படைத் தளத்துக்கு தப்பிச் சென்றனர் என்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியது.
இதனை இடத்தின் இலங்கையைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள என்ற ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.
இந்த செய்தியை அடுத்து 'இவை போலியானது, அப்பட்டமான பொய்யான அறிக்கைகளாக இருப்பதுடன் இவற்றில் எந்தவிதமான உண்மைகளும் யதார்த்தங்களும் இல்லாதவை இவ்வாறான தவறான செய்திகளை வெளியிடக்கூடாது' என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.