நிலக்கரி கையில் இருந்தும், அனல் மின்நிலைய உற்பத்தி நின்றது ஏன்? உள்ளதையும் மறைக்கும் தமிழக ஊடகங்கள்!

Update: 2022-05-08 13:31 GMT

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி நடைபெறவில்லை என்ற செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

மொத்தமுள்ள 5 யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.  நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் முழுமையாக மின் உற்பத்தி நடைபெறவில்லை என நியூஸ் 18ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது. 

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது ஆகிய மூன்று யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இரண்டு யூனிட்களில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆதாரம்: News 18

60 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பில் இருக்கும் போதும், 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. முதலில் நிலக்கரி பற்றாக்குறையால் மூடி வைத்துள்ளதாக கூறிய நிலையில், நிலக்கரி வந்தும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. அதனால் 4 அலகுகளிலும் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. இதனை தமிழக ஊடகங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் தான் மின்உற்பத்தி தடைபட்டதாக செய்தி வெளியிட்டு வருகின்றன. 

ஆதாரம்: Thanthi 


Similar News