இப்போ ஆல் பாஸ்சா இல்லையா? முன்னுக்குபின் முரணான அறிவிப்பு வெளியிட்டு மாணவர்களை குழப்பும் பள்ளிக்கல்வித்துறை!

Update: 2022-06-07 23:44 GMT

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

கடந்த 2021-22 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

9 ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

முதலில் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிட்டு, பிறகு தேர்வு எழுதி இருந்தால் தான் பாஸ் என அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Inputs From: News 18


Similar News