டைலர் கொலைச் சம்பவம்: கைதானவர்களுக்கு சிறையில் பிரியாணி வழங்கப்பட்டதா..?

Update: 2022-07-01 01:18 GMT

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த கன்ஹையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தலை துண்டித்துக் கொலைசெய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

தற்போது உதய்பூர் கொலைச் சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஊடகங்கள் சில இந்தத் தகவலை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்தத் தகவல் போலி என்று தற்போது ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக, ராஜஸ்தான் காவல்துறை அந்த போலித் தகவலின் ஸ்கிரீன் ஷாட்டைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

உதய்பூர் கொலைச் சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு போலி தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் தவறானது. குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.


Similar News