பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக பரவி வரும் தவறான வீடியோ!

Video Of Syrian Helicopter Shot Down In Idlib Shared As Footage Of Gen Bipin Rawat's Chopper Crash

Update: 2021-12-08 14:37 GMT

முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அறிக்கைகள் வந்த சில மணி நேரத்தில், சமூக ஊடகங்களில் பல பயனர்கள், Mi 17 ஹெலிகாப்டர் தரையில்  இறங்குவதற்கு முன்பு நடுவானில் தீப்பிழம்புகளாக வெடிக்கும் வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோ சிரியாவைச் சேர்ந்தது என்றும், அது தமிழ்நாட்டின் குன்னூரில் நடந்த சோகமான சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் நியூஸ்செக்கர் இணையதள குழுவினர் கண்டறிந்துள்ளார்.


இதேபோன்ற வீடியோக்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.

உண்மைச் சரிபார்ப்பு

ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக பரவும் வீடியோவின் கீழ், பல பயனர்கள் போலியானது என்று கூறியுள்ளனர். பயனர்களில் ஒருவர், அதே வீடியோவைக் கொண்ட, கடந்த ஆண்டு ட்வீட்டின் இணைப்பைப் பகிர்ந்துள்ளார்.

இது ஒரு சிரிய ஹெலிகாப்டர் என்றும், சிரியாவின் இட்லிப்பில் துருக்கிய ஆதரவு போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ட்வீட் கூறியுள்ளது. வீடியோவில் ஆடியோவும் உள்ளது, அதில் 'அல்லாஹு அக்பர்' என்ற கோஷங்கள் பின்னணியில் கேட்கின்றன.

வான் ஏவுகணைகளைப் பயன்படுத்தி, கிழக்கு இட்லிப்பில் உள்ள நய்ராப் பகுதியில் கிளர்ச்சியாளர்களால் சிரிய விமானப்படை ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதை வீடியோ காட்டுகிறது என்பது உண்மையான தகவலாகும்.

எனவே, பரவலாகப் பகிரப்பட்ட வீடியோ ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து அல்ல, சிரியா நாட்டில் நடந்த எம்ஐ 17 விபத்து வீடியோவாகும்.


Full View


சம்பவத்தின் பின்னணி

ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் விமானத்தில் இருந்த 11 பேர் விபத்தில் இறந்தது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை ட்வீட் செய்துள்ளது. 

ஜெனரல் ராவத், வெலிங்டனில் உள்ள (நீலகிரி) பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு, உரையாற்றுவதற்காக வருகை தந்திருந்தார். சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.45 மணிக்கு கோவை, வெலிங்டனுக்கு ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






Tags:    

Similar News