ஒரு சம்பவத்தை இப்படிக்கூட எடிட் பண்ண முடியுமா? பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பியதாக பரவும் வீடியோ!
Viral video of anti-Modi protests in Varanasi is doctored
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி-விஸ்வநாத் கோவிலை திறந்துவைத்தார். அப்போது யோகி ஆதித்யநாத்துடன் வீதியில் நடந்து செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக, மக்கள் கோஷங்களை எழுப்பியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 25 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயல்வதையும் காட்டுகிறது.
பரவி வரும் வீடியோ தகவல்:
இந்தி தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், "விற்றுத் தீர்ந்த ஊடகங்கள் இந்த செய்தியைக் காட்டாது" என்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷமாக பாய்ந்து வருவதாக கூறப்பட்டிருந்தது.
உண்மை நிலை:
உண்மையில் என்ன நடந்தது என்பதை மேலும் உறுதிப்படுத்த, சம்பவத்தின் போது உடனிருந்த உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர் சுஷாந்தா முகர்ஜியிடம் பேசினோம். வைரலான வீடியோ வாரணாசியில் உள்ள கோடோவ்லியாவில் இருந்து எடுக்கப்பட்டதை முகர்ஜி உறுதிப்படுத்தினார்.
நள்ளிரவு 12:20 மணியளவில், பிரதமர் மோடியும் முதல்வர் யோகியும் கோடோவ்லியா சௌக்கில் இருந்து தசாஷ்வமேத் காட் செல்லும் சாலையில் நடைபயணம் சென்று கொண்டிருந்தனர். இந்த வீடியோ கோடோவ்லியாவில் படமாக்கப்பட்டது. யாரும் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பவில்லை. மாறாக, மக்கள் பிரதமருடன் செல்ஃபி எடுக்க தீவிரமாக முயன்றனர்," என்று முகர்ஜி கூறினார்.
வாரணாசியில் உள்ள உள்ளூர் வழிகாட்டியான விஷன் சந்திர கோயல் வெளியிட்ட கூகுள் மேப்ஸில் சமீபத்தில் கிடைத்த கோடோவ்லியாவின் வீடியோவுடன் வைரலான வீடியோவின் இருப்பிடத்தை ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தோம் . கட்டிடங்கள், விளம்பர பலகைகள் மற்றும் பிற அடையாளங்களின் கட்டமைப்புகள் சரியான பொருத்தமாக இருந்தன.
எனவே, மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம். அசல் வீடியோவில், மக்கள் உண்மையில் பிரதமர் மோடிக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.