மேற்கு வங்காளம்: பா.ஜ.க தொண்டர்களின் மோதல் குறித்து தவறாக வைரலாகி வரும் 2016 புகைப்படம்.!
மேற்கு வங்காளத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல வதந்திகள் மற்றும் பழைய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றன.
மேற்கு வங்காளத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல வதந்திகள் மற்றும் பழைய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றன. அதேபோன்று மேற்கு வங்காளத்தில் ஹௌராஹ் பகுதியில் 2016 இல் பா.ஜ.க தொண்டர்கள் ஒருவர்க்கொருவர் மோதிக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த புகைப்படத்தில், "பாரம்பரிய காபி கடை சேதமாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் எதிரிகள் இவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் வங்காளத்தை அழித்துவிடுவர்," என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வைரல் புகைப்படம் குறித்துக் கண்டறிந்த போது ஏப்ரல் 2016 இல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அறிக்கையில் காணப்பட்டது. அதுபடி பா.ஜ.க தொண்டர்கள் ஒருவருக்கொரு மோதிக்கொண்டனர். மேலும் இந்த செய்தி குறித்து ஆராய்ந்த போது, 2016 இல் பஸ்ட்போஸ்ட் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இரண்டு வைரல் புகைப்படம் காணப்பட்டது மற்றும் அதற்கு கிரெடிட் PTI க்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து PTI யில் பார்த்தபோது, "பா.ஜ.க தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஹௌரா சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரூபா கங்குலி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மோதிக்கொண்டனர்," என்று ஏப்ரல் 3 2016 இல் வெளிவந்த செய்தி அறிக்கையில் காணப்பட்டது.
மேலும் ஒரு செய்தி தொலைக்காட்சியில், மார்ச்சில் காபி ஹவுஸில் தொண்டர்கள் நுழைந்து பா.ஜ.க விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஒட்டப்பட்டிருந்தது சுவரொட்டிகளைக் கிழித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது மோதல் நடந்தாக பரப்பப்பட்டுவரும் புகைப்படங்கள் பழைய சம்பவம் ஆகும், இதையும் தற்போதைய தேர்தலுக்காகத் தவறாகப் பரப்புரை செய்து வருகின்றனர்.