ஜே.பி.நட்டா கூறியதை திரித்து செய்தி வெளியிடும் பி.பி.சி - மறைமுக திட்டம் என்ன?

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பிநட்டா மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவித்த நிலையில் அதனை திரித்து ஊடகங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் நியூஸ் ஊடகங்கள் பி.பி.சி போன்றவை செய்து வெளியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-23 10:54 GMT

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பிநட்டா மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவித்த நிலையில் அதனை திரித்து ஊடகங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் நியூஸ் ஊடகங்கள் பி.பி.சி போன்றவை செய்து வெளியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பா.ஜ.க'வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை புரிந்தார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொழுது, விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கும் எனவும் அதன் பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் முடிவு அடைந்து விட்டதாகவும் கூறினார்.


 



பூர்வாங்க பணிகள் என்றால் முதற்கட்ட பணிகள் அதாவது அதற்கான அனுமதி, கட்டிட திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு சம்மந்தப்பட்ட பணிகள் போன்றவைகள் ஆகும். ஆனால் இதனை பி.பி.சி நியூஸ் போன்ற ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிடுகின்றன, அதாவது ஜே.பி.நட்டா விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என அறிவித்ததை பி.பி.சி செய்தி நிறுவனம் மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக ஜே.பி.நட்டா கூறுவதாக திரித்து எழுதியுள்ளனர்.




 

அதாவது அவர் விரைவில் கட்டுமான துவங்கும் என அறிவித்ததை 95 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவே ஊடகங்கள் குறிப்பாக அயல்நாட்டில் இருந்து இந்தியாவில் செய்தி பரப்பும் ஊடகங்கள் தெரிவித்தது உண்மைக்கு புறம்பான செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்குவது போல் தெரிகிறது.

Similar News