செந்தில் பாலாஜி முகத்திரையை தோலுரித்த அண்ணாமலை - மின் கட்டண உயர்வுக்கு உண்மையான காரணம் இது தானாம்!

Update: 2022-07-20 02:23 GMT

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது, வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம், மற்ற மாநிலங்களை விட குறைவாகவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

1 வருடமாக அவர் மின் கட்டணத்தை மாற்றாமல் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த மின்சாரத்துறை கூட்டத்தில் மத்திய அரசு எங்களிடம் அழுத்தம் கொடுத்தது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கண்டிப்பாக மானியம் தர மாட்டோம் என்றார். அதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினார். 

அமைச்சர் சொன்னதை அப்படியே வெளியிட்ட ஊடகங்கள், மத்திய அரசால் தான் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வது போல செய்தி வெளியிட்டன. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான விளக்கம் அளித்துள்ளார். 

மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம். மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம்.

தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? வரும் 23ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

Input From: Oneindia

Similar News