மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - தலைவர்கள் கருத்து!

Update: 2021-05-01 04:45 GMT

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை எட்டு கட்டங்களாக மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் மக்கள் கண்டிப்பாக ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

எனவே தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒரு சில நிறுவனங்களும், திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜ.க. இடையே கடுமையான போட்டிகள் இருக்கும் என்று சில நிறுவனங்களும் தங்களின் கருத்து கணிப்பை தெரிவித்து வந்தன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலார் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது "மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்போம்" என்றார். இதேபோல் பாஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும், மேற்கு வங்க துணை பொறுப்பாளருமான அமித் மால்வியா கூறுகையில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற அனைத்து கருத்துக்கணிப்பும் பொய்யாகும் என்றும் அடுத்தது மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப்போவது பா.ஜ.க.தான் என்று தெரிவித்தார். எப்படி இருந்தாலும் நாளை இரவுக்குள் இந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து முடிவுகளும் தெரிந்து விடும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News