3 தீய சக்திகளின் அடையாளமாக காங்கிரஸ் உள்ளது - பரணில் பிரதமர் மோடி தாக்கு!

Update: 2023-11-22 01:45 GMT
3 தீய சக்திகளின் அடையாளமாக காங்கிரஸ் உள்ளது - பரணில் பிரதமர் மோடி தாக்கு!

பெண்களின் நலனும் அவர்களின் பாதுகாப்பும் பாஜக ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படும் - பிரதமர் உறுதி! 


 பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அந்த உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வளர்ந்த நாடாக மாறாமல் இருப்பதற்கு மூன்று தீய சக்திகளே தடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. அந்த மூன்று தீய சக்திகளானவை ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகும். இந்த மூன்று தீய சக்திகளை கொண்ட அடையாளமாக காங்கிரஸ் உள்ளது. அவர்களால் அவர்களின் கட்சியை சேர்ந்த உறுப்பினரையும் அமைச்சரையுமே கட்டுப்படுத்த முடியவில்லை! இதனால் பொதுமக்கள் தான் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். 


பெண்களுக்கு அநிதி விளைவிப்பவர்கள், கொள்ளையர்கள், கலவரக்காரர்கள், குற்றவாளிகள், கொடுங்கோலர்கள் போன்றவர்களிடம் காங்கிரஸ் ராஜஸ்தான் மக்களை ஒப்படைத்து விட்டது. இதனாலே தற்பொழுது அசோக் கெலாட் உங்களுக்கு வாக்குகள் கிடையாது என்று ராஜஸ்தானின் குழந்தைகள் கூறுகிறார்கள் என்று பேசினார். அதோடு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் நலனும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்கான முன்னுரிமைகள் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

Source : The Hindu Tamilthisai 

Similar News