ராஜஸ்தானில் காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

Update: 2023-11-20 11:43 GMT

நவம்பர் 25ஆம் தேதி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் பாலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டில் முன்னோக்கி கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது முக்கிய அவசியம். இதனால் வருகின்ற தேர்தலில் ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக காங்கிரஸும் I.N.D.I.A கூட்டணியும் சனாதனம் குறித்து கூறியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர்களுக்கு வாரிசு அரசியல் மட்டுமே தெரியும்!


பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 97 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 12 ரூபாய் அதிகமாக பெட்ரோலுக்கு விற்கப்படுகிறது. இங்கு இன்றே உத்திரவாதம் அளிக்கிறேன் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்த உடன் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் மறு ஆய்வு செய்யப்படும். 


பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் புரிகின்ற நம்பர் ஒன் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. பெண்ணை குறித்து சட்டசபையில் மிகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பிகார் முதல்வர் பேசியிருப்பது வருத்தத்திற்குரியது என்று உரையாற்றினார். 

Source : Dinamalar 

Similar News