ராமர் மண்ணில் நிர்மலா சீதாராமன்! "டிஜிட்டல் பரிவர்த்தனையால் பயனடையும் வியாபாரிகள்"
இன்று ராமேஸ்வரம் சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு அங்கு நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் கடன் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அவருடன் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மற்றும் அம்மாவட்ட நிர்வாகிகள் சிலர் பங்கேற்றனர். இவ்விழாவில் நிர்மலா சீதாராமன், பிரதமராக நரேந்திர மோடி 2014இல் ஆட்சி பொறுப்பை ஏற்றதற்கு பின்பு மக்களின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையை கொண்டுள்ளார்.
மத்திய அரசின் கடன் உதவிகள் மற்றும் மானிய சலுகைகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக முழுவதுமாக சேர வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர் பிரதமர் மோடி! அதன்படியே இடைத்தரகர்கள் இன்றி வங்கி மூலம் முத்ரா திட்டத்தின் வழியாக மக்களுக்கு நேரடியாக முழு பணமும் சென்றடைகிறது என்று முத்ரா திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையால் சில்லறை பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வியாபாரிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது என்று கூறினார்.
அதற்குப் பிறகு பயனாளிகளுக்கு காசோலை வழங்கியதோடு ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி அறிவியல் படைப்பு மாணவர்களுக்கு சந்திராயன் மூன்றின் மாதிரிகளை நினைவு பரிசாக வழங்கினார்.
Source : Dinamalar