நேரம், செலவு சேமிக்கும் எலக்ட்ரிக் கேபிள் ஹைவே! "இந்தியாவில் முதல் முறையாக" நிதின் கட்கரி புதிய அறிவிப்பு!!
இந்தியாவிலேயே முதல்முறையாக சூரிய ஒளியை இயங்கக்கூடிய மின்சார போக்குவரத்து சாலை அமையக்கூடிய அதிவேக தொழில்நுட்பத் திட்டத்தை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜெய்ப்பூர் டெல்லி இடையிலான எலக்ட்ரிக் ஹைவே திட்டம் பற்றி தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை செல்லக்கூடிய ஐந்து வழிச்சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இதற்கிடையில் தான் தற்பொழுது இந்தியாவின் முதல் மின்சார போக்குவரத்து சாலை அமைய உள்ளது. மேலும் இந்த சாலை டெல்லி - மும்பை இடையிலான விரைவு சாலையில் ஒரு பகுதியாகவும் அமைய உள்ளது. அதோடு சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி அதன் உதவியால் வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்களுக்கான போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தும் இதில் இயங்க உள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மின்சார கேபிள்கள் மூலம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வாகனங்கள் செல்ல உள்ளதால் அதிக அளவிலான நேரமும், டீசல் மற்றும் பெட்ரோல் செலவும் சேமிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
Source : Oneindia