வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை.. 3 நாட்களில் 200,000 பேர் பங்கேற்பு..
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய அரசின் மிகப்பெரிய முயற்சியான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, நாட்டின் தொலைதூர பகுதிகளுக்குச் சென்றடைவதிலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், முதன்மைத் திட்டங்களின் 100% அமலாக்கம் என்ற லட்சிய இலக்கை அடைவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
நவம்பர் 15, 2023 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த யாத்திரை, பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடர்பு (ஐ.இ.சி) வாகனங்களில் புறப்பட்டது. இந்த ஐ.இ.சி வாகனங்கள், பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதையும், திட்டங்களின் 100% அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக "மக்களின் பங்களிப்பு" உணர்வில் அவர்களைக் கலந்து கொள்ளச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அரசுத் திட்டங்களின் பயன்கள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்வதற்குத் தொடர்ச்சியான முயற்சியுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
லடாக்கில் ஜனாஸ்கர் பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலை அடையும் ஐ.இ.சி வாகனம். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, லடாக்கில் உள்ள ஜனாஸ்கர் பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலை அடைந்து, பிரச்சாரத்தின் செய்தியை நாட்டின் தொலைதூர மூலைகளுக்குக் கொண்டு சென்றது. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் பழங்குடி மாவட்டத்தை அடைந்த வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் பழங்குடி மாவட்டத்தை இந்த யாத்திரை வெற்றிகரமாக அடைந்தது, உள்ளூர் மக்களிடையே மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Input & Image courtesy: News .