தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 11 பேருடன் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காணாமல் போன மீனவர்கள் படகை இந்திய கடற்படையினர் கடுமையான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். படகில் இருந்த அனைத்து மீனவர்களும் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி 11 பேர் கொண்ட மீனவர்கள் குழு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றது. இவர்கள் மீன்பிடி படகான மெர்சிடஸ் கடந்த ஏப்ரல் 24 அன்று காணாமல் போனதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய கடற்படை அதிகாரிகள் படகை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
படகு மூழ்கி இருக்கும் என்று சந்தேகம் ஏற்பட்ட நிலையில் கடற்படையின் ஐசிஜி டோர்னியர் மற்றும் ஐசிஜி விக்ரம் என்ற கடலோர காவல் படையின் கப்பல்கள் உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல் துறையின் நான்கு நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு காணாமல் போன மீனவர்கள் லட்சத்தீவுகளுக்கு 370 கிலோமீட்டர்கள் தூரத்தில் சிக்கி கொண்டிருந்ததை கண்டனர்.
அங்கு விரைந்து சென்ற அவர்கள் 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மீனவ குடும்பத்தினர் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை கடற்படை காவல்துறையினரால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் வெகுவாக குறைந்து இருக்கும் நிலையில் காணாமல் போகும் மீனவர்களையும் துரித நடவடிக்கைகள் மூலம் மோடி அரசு மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது.