இங்கிலாந்து பிரதமருடன் இந்திய பிரதமர் நாளை ஆலோசனை: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Update: 2021-05-03 12:01 GMT

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பின்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் இணையதளம் வழியாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை அமையும் என்றும், மேலும் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான உத்திகளையும் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவா்களின் ஆலோசனை உதவும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. பிரதமா் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமரிடையே மே 4ம் தேதி அதாவது நாளை நடைபெறும் மெய்நிகர் மாநாட்டில், "விரிவான செயல் திட்டம் 2030" என்ற 10 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த விரிவான செயல்திட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்த 5 துறைகளில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து மக்களை மேலும் வலுப்படுத்த உதவும். வா்த்தகம் மற்றும் முன்னேற்றம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தாா். ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், அவா் தனது இந்திய பயணத்தை ரத்து செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News