பெங்களூரு மருத்துவமனையில் கொடுமை! அதிகாரிகளின் மோசடி அம்பலம் - களத்தில் இறங்கி பகிரங்கப்படுத்திய பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா

Update: 2021-05-05 00:45 GMT

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட, கூடுதல் பணம் கொடுத்தால் தான் பெட் கிடைக்கும் என சில மருத்துவமனைகள் வேண்டும் என்றே மோசடி செய்வது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா "வார் ரூம்" சென்று ஆய்வு நடத்தி இந்த அவலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் லட்சக்கணக்கான பணம் பெற்றுக் கொண்டு பணம் தருபவர்களுக்கு மட்டும் பெட்ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

மொத்தம் 3மாநகராட்சி அதிகாரிகள் வார் ரூம் மையத்தில் இது போன்ற முறைகேடு வேலையில் ஈடுபட்டது அம்பலமானது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனரை தேஜஸ்வி சூர்யா கேட்டுக் கொண்டார்.

இது குறித்து தேஜஸ்வி சூர்யா கூறுகையில்,

இரவு 12 மணிக்கு பெட் புக்கிங் செய்து, முறைகேடு நடந்துள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்று கூறிவிட்டு, ஆயிரக்கணக்கான பணம் பெற்றுக் கொண்டு சாதாரண நோயாளிகளுக்கு சீட் ஒதுக்குகிறார்கள். ஆக்சிஜன் தேவைப்படுவோர் செத்து மடிகிறார்கள். இது கொலையாகும் என அவர் தெரிவித்தார்.


Similar News