மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சி தொண்டர்களால் பற்றி எரியும் மாநிலம் - குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா?

Update: 2021-05-05 01:15 GMT

மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

இது திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாக்கியது. அதன் எதிரொலியாக, சுவேந்து அதிகாரியின் வாகனத்தை தாக்கியதோடு, நந்திகிராமில் உள்ள பாஜக அலுவலகங்களில் ஒன்றை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தீ வைத்து கொளுத்தினர். வன்முறை தாக்குதலில் 11 பேருக்கும் அதிகமானோர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது, இடது சாரி கட்சிகளின் தொண்டர்களையும் தாக்கி, அவர்களது வீடு புகுந்த அவர்கள் மனைவிகளை கற்பழித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை, சீர் கெட்டு போயுள்ளது. நந்திகிராமில் பதற்றம் நிலவுகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடி மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வன்முறை தொடர்பாக விளக்கமளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் ஆளுநரும் கவலை தெரிவித்து உள்ளதால், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Similar News