மூன்றாவது அலை கொரோனா எப்பொழுது? முதன்மை ஆலோசகர் எச்சரிக்கை!

Update: 2021-05-06 11:42 GMT

தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞானிகள் ஆலோசகர் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும் அதற்கு அதிகாரிகள் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனைகளை கூறினார்.

மூன்றாம் கட்டம் தவிர்க்க முடியாதது, அதிக அளவில் வைரஸ் புழக்கத்தில் இருப்பதால், இந்த கட்டம் எந்த நேர அளவில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. புதிய அலைகளுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று இன்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்தார். 


புதிய வகை கொரோனா கடந்த வருடம் தோன்றிய கொரோனாவைப் போலவே வேகமாக தற்பொழுது பரவுகின்றன. இது புதிய வகையான பரிமாற்றத்தின் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. இது மனிதர்களை அதிகமாக பாதிக்கிறது. இது நுழைவு பெறும்போது அதை மேலும் பரவும் வகையில் செய்கிறது என ராகவன் மேலும் கூறினார்.

பெரிய 2 வது அலை ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டில் தினசரி லட்சக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான கொரோனா இறப்புகளும் பதிவாகின்றன. தற்பொழுது உள்ள புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள முன்னோடியில்லாத வகையில் மருத்துவ அவசரநிலையுடன் சுகாதார உள்கட்டமைப்பு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.


மேலும் இந்த வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவின் முக்கிய பகுதிகளான டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட சிறந்த நகரங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை கடுமையாக எதிர்கொள்கிறது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், கடந்த வாரம் உலகளவில் பதிவான கொரோனா பாதிப்புகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது என்பது உற்று நோக்கத்தக்கது.

Similar News