கொரோனாவை எதிர்கொள்ள நன்கொடை மூலமாக இந்தியாவிற்கு கைகொடுக்கும் மற்றொரு நிறுவனம்!

Update: 2021-05-06 11:42 GMT

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே அவற்றை எதிர்த்து போராட பல்வேறு வகையான உதவிகளையும் மற்றும் நன்கொடை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், கொரோனா நிவாரண முயற்சிகளுக்கான தனது நன்கொடை நிதியை சுமார் ரூ 200 கோடியாக உயர்த்தியுள்ளது. இது மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகளைச் சேர்க்கவும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களின் விநியோகத்தை அதிகரிக்கவும் பயன்படும் என்று இன்போசிஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


இன்போசிஸ் CEO சலீல் பரேக் இதைப் பற்றிக் கூறுகையில், "நிறுவனம் நாடு முழுவதும் உள்ள ஏழு மேம்பாட்டு மையங்களில்(DC) ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசி மையங்களை நிறுவியுள்ளது. மேலும் அவற்றை மற்ற DCகளில் நிறுவுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்தியா முழுவதும் 130க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் இன்போசிஸ் ஒத்துழைத்துள்ளது. அங்கு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போடலாம். இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க கடந்த ஆண்டு ரூ 100 கோடியை இன்போசிஸ் சார்பில் நாங்கள் MP கேர்ஸ் நிதிக்கு பங்களித்தோம்.


வரவிருக்கும் ஆண்டில் நாடு முழுவதும் எங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோம். மேலும் கொரோனா நிவாரண முயற்சிகளுக்காக எங்கள் உறுதிப்பாட்டை ரூ 200 கோடிக்கு விரிவுபடுத்தியுள்ளோம்" என்று அவர் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் வழியாக கூறினார்.

பெங்களூரை தளமாகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனம் அப்தாமித்ரா என்ற ஆப் மூலம் கர்நாடக அரசுக்கு ஆதரவளித்து வருகிறத என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்ட அமலாக்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு ஆதரவாக BBC கருவிகள், சானிட்டைசர்கள், மருந்துகள், முககவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்க நிறுவனம் பங்களித்துள்ளது என அவர் மேலும் கூறினார்.

Similar News