தடுப்பூசி போடும் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்!

Update: 2021-05-07 12:03 GMT

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மோசமான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான புதிய தொற்றுகள் சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 

இந்த பயங்கர சூழலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. குறிப்பாக கொரோனா பாதிப்பு நிலவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் பிரதமர் மோடி அவர்கள் இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.


எனவே தற்போது உள்ள நிலைமைகளை சரிப்படுத்த மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றனர் மேலும் தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரிப்பு அதிகரிக்கும் மற்றும் தடுப்பூசி அளித்தல் பணியில் வேகமாக செயல்படவும் மாநில அரசு கேட்டுக் கொண்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் கையிருப்பு, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மந்திரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.


அத்துடன் தற்போது பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்களை வேறு பணிகளுக்கு மாற்றக்கூடாது எனக்கூறிய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு நடைமுறைகள் இருந்தாலும் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்க மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 




Similar News