மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்துகள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

Update: 2021-05-08 11:54 GMT

சீனாவில் உள்ள உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது இன்று உலகில் உள்ள பல நாடுகளை மிகவும் கடுமையான முறையில் பாதித்துள்ளது எனவே தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் லட்சங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவற்றைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்து உற்பத்திகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரெம்டெசிவர் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை ஆய்வு மேற்கொண்ட பொழுது இவ்வாறு கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள  ரெம்டெசிவர் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஆய்வகம் ஒன்று உள்ளது. இவற்றை ஆய்வு ஆய்வு செய்த பிறகு ஊடக துறையினரை சந்தித்து பொழுது அவர் கூறியதாவது, ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். உற்பத்தியை அதிகரிப்பதால் மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என அவர் கூறினார்.


மேலும் ரெம்டெசிவர் அரசு நிர்ணயம் செய்த விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணித்து வருவதாகவும், கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

\ரெம்டெசிவர் மருந்து தற்போது அரசு அல்லாத மருத்துவமனைகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் ஒரு மருந்தாக இருக்கிறது. இவற்றை முழுவதும் கண்காணிப்பது அரசின் ஒரு முக்கிய வேலையாகும் என்று அவர் கூறினார். இவற்றின் மூலம் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு சரியான நேரத்தில், சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். 

Similar News