கொரோனாவை தடுப்பதற்கும் திரவ நிலை ஆக்சிஜன் சப்ளையில் களமிறங்கிய இந்திய ரயில்வே துறை!

Update: 2021-05-08 11:54 GMT

கொரோனாவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக இந்திய விமானப்படையின் சார்பாக விமானங்கள் மருந்துகளை சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ரயில்வே துறையும் களமிறங்கியுள்ளது.

ரயில்வே துறையின் சார்பாக 161 டேங்கர்களில் 2,511 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் விநியோகித்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 2,511 மெட்ரிக் டன் எடையுள்ள திரவ மருத்துவ ஆக்சிஜனை 161 டேங்கர் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக கடந்து இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுடில்லி, ஹரியானா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலத்திற்கு சுமார் 2,511 மெட்ரிக் டன் இடை கொண்டு ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பப்பட்டுள்ளது.


தற்போது வரை, 40 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே தனது நோக்கமாக தற்பொழுது எடுத்துக் கொண்டுள்ளது.

22 டேங்கர்களில் 400 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் புதுடெல்லியை விரைவில் சென்றடையும். இந்த ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு ரயில்வே துறை மிகவும் துடிப்பான முறையில் செயல்பட்டு ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டு தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. இவ்வாறு இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News