கொரோனாக்கு எதிரான யுத்தத்தில் முழுமையாக களமிறங்கிய இந்திய விமானப்படை!

Update: 2021-05-09 12:07 GMT

கொரோனாவின் பாதிப்புகள் காரணமாக இந்திய விமானப்படை தற்பொழுது முழு பலத்துடன் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. சரியான நேரத்தில் மருத்துவப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் வேலைகளையும் மிக கச்சிதமாக செய்யும் ஒரே திறன் கொண்டதாக இந்திய விமானப்படை தற்பொழுது திகழ்கிறது.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சுமார் 42 விமானங்களை அனுப்பியுள்ளதாக இந்திய விமானப்படை IAF உறுதிப்படுத்தியது. அவை வெளிநாட்டிலிருந்து நிவாரணப் பொருட்களைக் கொண்டு வர உதவுகின்றன. IAF பணியாளர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதையும் IAF உறுதிப்படுத்தியது.


இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுடன் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் மகரந்த் ரானடே, "கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மொத்தம் 12 பெரிய கனரக லிப்ட் மற்றும் 30 நடுத்தர லிப்ட் விமானங்களை IAF பயன்படுத்தி வருவதை உறுதிப்படுத்தினார். இந்த விமானங்கள் நிவாரண நடவடிக்கைகள், பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து பொருட்களைக் கொண்டு வர பயன்படுத்தப் படுகின்றன.


இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் மூலம் இதுவரை கிட்டத்தட்ட 75 ஆக்சிஜன் கொள்கலன்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளன. மேலும் பணிகள் நடந்து வருகின்றன என்றார். IAF பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்துப் பேசியவர், இதுவரை 98 சதவீத விமானப் பணியாளர்கள் முதல் டோஸ் பெற்றுள்ளனர். 90 சதவிகிதத்திற்கு அருகில் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. நாங்கள் 100 சதவீத தடுப்பூசி இலக்கை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார்.

Similar News