மருந்து பொருள்களுக்கு எதற்காக ஜிஎஸ்டி?- மத்திய அமைச்சர் விளக்கம்!

Update: 2021-05-10 08:17 GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் உபகரணங்கள் ஆகியவற்றிற்கான உள்ளூர் விநியோகம் மற்றும் இறக்குமதிக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்தால் மருந்துப் பொருள்களின் விலை உயரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்




தற்போது உள்நாட்டில் தடுப்பூசி விற்பனை செய்வோர் மற்றும் வர்த்தக ரீதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆக்ஸிஜன் உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. 'தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளித்தால் உள்ளீட்டு வரியை அவர்களால் ஈடு செய்ய முடியாது. இதனால் இந்த வரியையும் நுகர்வோரே செலுத்த நேரிடும்' என்பதால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் மருந்து பொருட்களின் விலை உயரும் நிலை உண்டாகும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் ₹100

₹50 மாநில அரசுக்கும் ₹50 மத்திய அரசிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு கிடைக்கும் 50 ரூபாயில் 41 சதவீதம் அதாவது 20.5 ரூபாய் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 100 ரூபாயில் 70.5 ரூபாய் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இறக்குமதி செய்யும் மருத்துவ பொருள்களுக்கு வரி விலக்கு அளித்தால் மாநிலங்களின் வருவாய் பாதிக்கும் நிலை ஏற்படும். இதன் காரணமாகவே மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் வெளிநாடுகளிலிருந்து இலவசமாகவும் நன்கொடையாக வரும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் சுங்க கட்டணங்களில் இருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே அமலில் உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினா.

Similar News