"ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமர்ந்து கொண்டு இந்தியாவை விமர்சிப்பதா"- சர்வதேச ஊடகங்களைத் தாளித்த மேத்யூ ஹைடன்!

Update: 2021-05-16 09:44 GMT

இந்தியாவில் கொரோனா‌ பெருந்தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், மேலை நாட்டு ஊடகங்கள் இதை இந்தியாவின் நேர்மறையான சர்வதேச பிம்பத்தை உடைக்கவும் இழிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. மயானத்தில் பிணங்கள் எரியும் மற்றும் கங்கையில் சடலங்கள் மிதக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

எனினும் பல நாடுகளும் பிரபலங்களும் மருத்துவ ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்தியா இந்த பெருந்தொற்றை எவ்வாறு தீரத்துடன் எதிர்கொள்கிறது என்றும், இந்தியாவின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதும் பத்திரிகையாளர்கள் பற்றியும் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் "முன்னெப்போதும் பார்த்திராத அளவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா இரண்டாவது அலையின் மத்தியில் உள்ளது. 1.4 பில்லியன்(140 கோடி) மக்கள் உள்ள இந்தியாவில் எந்த ஒரு அரசுத் திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவது மிகவும் சவாலான விஷயம். இப்படிப்பட்ட நிலையில் இந்தியா வேகமாகப் பரவி வரும் வரைஸ்தொற்றைக் கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், சர்வதேச ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன." என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழ் நாடு எனது 'ஆன்மீக இல்லம்' என்று கூறியுள்ள மேத்யூ ஹைடன், "பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்துள்ளேன்" என்றும் "இப்படிப்பட்ட வேற்றுமைகள் நிறைந்த, பெரிய நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை கையிலா வைத்திருக்கும் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது அபரிமிதமான மரியாதை வைத்துள்ளேன்" என்றும் பதிவு செய்துள்ளார்.

தான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் தன்னை அன்புடனும் நேசத்துடனும் வரவேற்றதாகவும் அதனால் தான் இந்திய மக்களுக்கு கடன் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தான் பல வருடங்களாக இந்தியாவை மிக அருகிலிருந்து பார்த்து வருவதாகவும் எனவே தான் இந்திய மக்களின் சவால்களைப் பற்றி அறியாத இந்தியாவைப் புரிந்து கெள்ள முயற்சி செய்யாதவர்கள் ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிடுவது தனக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு இந்தியாவில் உண்மையில் என்ன‌ நடக்கிறது என்று தெரியாமல் இந்திய அரசை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவைப் பற்றிய தனது பார்வையை தெரிவிக்க விரும்பியதாக ஹைடன் தனது பதிவில் கூறியுள்ளார்.

Source: https://www.dailypioneer.com/2021/columnists/incredible-india-deserves-respect.html 

Tags:    

Similar News