ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை குறித்து பேசிய சாம் ஆல்ட்மேன்!!

Update: 2026-02-21 08:46 GMT

10 கோடி பேர் இந்​தி​யா​வில் மட்டும் வாரந்​தோறும் சாட் ஜிபிடி தளத்​தைப் பயன்படுத்தி வரும் நிலையில் மூன்​றில் ஒரு பங்​குக்​கும் அதி​க​மானோர் மாணவர்​கள் என தெரிகிறது. ஓபன் ஏஐ நிறு​வனத்​தின் கோடிங் தளமான கோடெக்​ஸ் பயன்​பாட்​டில் உலகிலேயே மிக வேக​மாக வளர்ந்து வரும் சந்தை​யாக இந்​தியா உள்ளது.


செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பம் அசுர வளர்ச்சியை எட்​டி​ய நிலையில் பள்ளி அளவிலான கணிதப் பாடங்​களுக்கே திணறிய ஏஐ தொழில்​நுட்​பம், இன்று ஆராய்ச்சி அளவி​லான கணிதத் தீர்​வு​களை வழங்குவதுடன், இயற்​பியல் துறை​யில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.


ஏஐ தொழில்​நுட்​பம் ஒரு குறிப்பிட்ட நிறு​வனம் அல்​லது நாட்​டின் கைகளில் முடங்​கி​விடக் கூடாது. இது ஜனநாயகப்​படுத்​தப்பட வேண்​டும். அப்போது​தான் சுதந்​திரம், சமத்து​வம், மனித குல வளர்ச்சி உறுதி செய்யப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி பழைய வேலைகளை மாற்​றியமைக்​கும், மனிதர்​கள் புதிய மற்​றும் சிறந்த வேலைகளைக் கண்டறிவார்கள். 

Tags:    

Similar News