கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மின்சார பயன்பாட்டில் சரிவு!

Update: 2021-05-18 07:43 GMT

மே மாதத்தில் பாதியில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மின்சார பயன்பாடு ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும் போது 6.2 சதவீதம் குறைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மே மாதத்தில் முதல் 16 நாட்களில் மாநிலங்களுக்கு வழங்கிய மொத்த மின்சாரத்தை ஏப்ரல் இரண்டாம் பாதியில் ஒப்பிடும் போது, 3,910 பில்லியன் யூனிட் ஆக இருந்ததை விட 3,666 பில்லியன் யூனிட் ஆகக் குறைந்துள்ளது.

நாட்டின் மொத்த வருடாந்திர மின்சார பயன்பாட்டில் பாதி தொழில்துறை மற்றும் அலுவலகத்துக்குப் பயன்படுகிறது. இந்தியாவில் மின் உற்பத்தி பொதுவாக ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கி மே மாதத்தில் ஏர் கண்டிஷனிங் பயன்பட்டால் உச்சத்தை அடையும்.

2020 மே மற்றும் ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை விதித்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடுமையாக உள்ள போதிலும் நாடு தழுவிய ஊரடங்கை கைவிடுத்தது, இருப்பினும் மாநிலங்களில் சில பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் ஏப்ரல் இரண்டாம் பாதி உடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் நான்கில் மூன்று பகுதிகளில் மின்சார பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாபில் மற்றும் டெல்லி போன்ற வாடா மாநிலங்களில் மின் பயன்பாடு உயர்ந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏப்ரல் இரண்டாம் பாதியை ஒப்பிடும் போது ஒட்டுமொத்த மின் உற்பத்தி 6.3 சதவீதமாகச் சரிந்தது.


மொத்த மின்சார பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்கினை கொண்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் மின்சார பயன்பாடு தலா ஐந்து சதவீதம் குறைந்தது.

Source: NDTV 

Similar News