இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை.!

Update: 2021-05-22 12:48 GMT

இந்தியாவில் வேகமாக உருவெடுத்து வரும் கொரோனா இரண்டாம் அலைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் மத்திய அரசு தற்போது கொடுத்து வருகிறது. மேலும் உள்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிற்கு வெளியிலும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து தடுப்பூசிகளின் பற்றாக்குறையை தவிர்ப்பது எப்படி? என்றும் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சினுக்கான உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.


கோவாக்சின் உற்பத்தியை அதிக படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இந்த விஷயத்தை எடுத்துச் செல்லவும் இந்திய அரசாங்கம் விரும்புகிறது. மாடர்னா, ஜான்சன்/ஜான்சன் மற்றும் பிற தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் தொழில்நுட்ப அடிப்படையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தற்போது மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவில் அதிக தன்னார்வ உரிமங்களை வழங்க ஊக்குவிப்பதற்காக கோவிஷீல்ட் தயாரிப்பாளரான அஸ்ட்ராஜெனெகாவுடன் இந்த விவகாரத்தை பேசும்படி வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.


தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து பல மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கோவாக்சின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம், கோவாக்சின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பயோடெக்னாலஜி துறை(DPD) அறிவித்தது. அனைத்து உற்பத்தியாளர்களுடனும் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தனித்தனியாக, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News