ஒருவருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கொடுக்க முடியுமா? நிதி ஆயோக் கூறுவது என்ன?

Update: 2021-05-24 01:45 GMT

கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் அளவுகளை கொண்டுள்ளது. ஒரு நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கொடுக்க முடியுமா? என்பது போன்ற பல கேள்விகள் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் V.K.பால் அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் கூறுகையில், "ஒரு நபர் வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டளவிலும் இது சாத்தியம் என்றும், ஆனால் இதை பரிந்துரைப்பது தற்போது உள்ள சூழ்நிலையில் கடினம் என்றும் இந்தக் கேள்விக்கு காலத்தால் மட்டுமே பதிலளிக்க முடியும்" என்றும் கூறினார். 


ஒரு நபர் முதல் டோஸில் பெற்ற மருந்திலிருந்து வேறுபட்ட தடுப்பூசி மூலம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட முடியுமா? என்று கேட்டால், இதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் எதுவும் தற்போது இல்லை என டாக்டர் V.K.பால் கூறினார். மேலும் அவரிடம் பாலூட்டும் தாய்மார்கள் தற்போது தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவருடைய குழந்தைகளையும் பாதிக்குமா? என்று கேட்ட பொழுது அவர் கூறிய பதில் என்னவென்றால், தற்பொழுது பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் தீங்கும் ஏற்படாது என்று கூறினார். 


மேலும் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுகள் குழந்தைகளிடையே பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது குறித்து பேசிய V.K.பால், 10-17 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு செரோபோசிட்டிவிட்டி விகிதம் தோராயமாக 30-40 க்கு சமமாக இருப்பதாகவும், குழந்தைகளும் தொற்றுநோயை பரப்பக்கூடும் என்றும் கூறினார். ஆகவே குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பெற்றோர்களை கேட்டுக்கொண்டார். அனாவசிய தேவைகள் இன்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை குறித்து பேசிய அவர், மருந்துகளின் கிடைக்கும் தன்மை அதிகரித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

Tags:    

Similar News