குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் : பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு.!

Update: 2021-05-24 12:53 GMT

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு ஒரே தீர்வாக இருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தற்போது அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் குறிப்பாக இந்த நோய் தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்புகளை இந்த நோய் தொற்று ஏற்படுத்தும் காரணத்தினால், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடங்கும் என்று கூறியுள்ளது.


விரைவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகளையும் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் சர்வதேச ஆலோசனை தலைவராக இருக்கும் டாக்டர். ரேச்ஸ் எலா தற்பொழுது தெரிவித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புடன் நடைபெற்ற கலந்துரையாடலில் போது டாக்டர். ரேச்ஸ் எலா கூறியதாவது, "கடந்த ஆண்டு கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இப்போது எங்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். 


இந்த ஆண்டு இறுதிக்குள் கோவாக்சின் உற்பத்தி திறனை சுமார் 70 கோடி அளவுகளாக பாரத் பயோடெக் அதிகரிக்கும். தடுப்பூசி தயாரிக்கும் பயணத்தில் எங்களுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவும் கிடைத்ததில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தடுப்பூசி நாங்களும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து உருவாக்க்கி உள்ளோம். அரசாங்கம், ரூ.1,500 கோடிக்கு மேல் கொள்முதல் உத்தரவு வழங்கி உள்ளது. இது எங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவும்" என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News