கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் : மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

Update: 2021-05-25 14:31 GMT

உலக அளவில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இது இந்தியாவிலும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. கொரோனா மூன்றாம் அலைகளில் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து இருப்பதைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை அமைப்பு எழுதிய கடிதத்தில், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும் எனத் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது.

அண்மையில், தேசிய குழந்தைகள் உரிமை அமைப்பு, குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


"மூன்றாவது அலைகளில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று குழந்தை மருத்துவ சங்கம் கூறியுள்ளது. இது குழந்தைகளை அதிக அளவில் பாதிக்காது. எனவே மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை" என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர். குலேரியா செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். இதற்கிடையில், "குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தான் மியூகோர்மைகோசிஸ், கேண்டிடா மற்றும் அஸ்போரோஜெனஸ் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப் படுகிறார்கள். இந்த பூஞ்சைகள் முக்கியமாக சைனஸ்கள், மூக்கு, கண்களைச் சுற்றியுள்ள எலும்புகளில் காணப்படுகின்றன மற்றும் மூளைக்குள் நுழையக்கூடும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.


கொரோனாவுக்குப் பிறகு சில அறிகுறிகள் காணப்படுகின்றன. அறிகுறிகள் 4-12 வாரங்களுக்கு காணப்பட்டால், அது தற்போதைய கடுமையான கொரோனா நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் 12 வாரங்களுக்கு மேல் காணப்பட்டால், அது கொரோனாவுக்கு பிந்தைய நோய்க்குறி என டாக்டர். குலேரியா குறிப்பிட்டார். மேலும் இதுகுறித்து கொரோனாவின் 3வது அலைகளில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News